75000ஐ நெருங்கிய பாதிப்பு..! மகாராஷ்டிராவில் கொரோனா உச்சம்

204

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 75,000ஐ நெருங்கி இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்தை தாண்டி விட்டது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 9304 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இதுவரை 6075 பேர் உயிரிழந்த நிலையில், 1,04,107 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 74,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதுவரை 2587 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 32,329 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகம் தொடர்ந்து 2வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் 25,872 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரை 208 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 14,316 பேர் குணமடைந்துள்ளனர்.

டெல்லி 3வது இடத்தில் உள்ளது. டெல்லியில் 23,645 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. அங்கு, 606 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 9542 பேர் குணமடைந்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of