ரூ.2.89 லட்சம் மதிப்பிலான தங்க முககவசம்

198

கொரோனா தொற்று பரவலை தடுக்க மாஸ்க் என்பது அத்தியாவசி ஒன்றாகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஒருவர் தங்க மாஸ்க் தயாரித்து அதனை அணிந்து கொண்டு வலம் வருகிறார்.

ஷங்கர் குரேட் என்பவர் தங்க நகைகள் மீது அலாதி பிரியம் கொண்டவர். இவர் தற்போது தங்கத்தினால் ஆன மாஸ்க் ஒன்றை தயாரித்து அணிந்து வருகிறார்.

சுமார் 2.89 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த மாஸ்க்கிஸ் சிறிய சிறிய துளைகள் இடப்பட்டுள்ளன.

இதனால் தனக்கு சுவாசத்துக்கு பிரச்சனை இல்லை என கூறுகிறார். அதேநேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க இந்த மாஸ் உதவுமா என்பது கேள்விக்குறி தான். ஷங்கர் குரேட் தங்க மாஸ்க் அணிந்து வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of