“இனிமே பத்து ரூபாய் போதும்..” மகாராஷ்டிர அரசின் அசத்தல் திட்டம்..! பொதுமக்கள் வரவேற்பு..!

312

நடந்த முடிந்த மகாராஷ்டிர சட்டசபை தேர்தலில் சிவசேனா கட்சி பல்வேறு இடர்பாடுகளைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியமைத்தது.

இந்த தேர்தலில் சிவசேனா கட்சி, பிரதான தேர்தல் அறிக்கையாக, சிவ போஜன் என்ற 10 ரூபாய் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது.

இந்நிலையில் நேற்று குடியரசுத்தினத்தையொட்டி சிவ போஜன் திட்டம் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், காய்கறி மற்றும் பருப்பு ஆகியவை ரூ.10-க்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சிறப்பு உணவகங்களில் நண்பகல் 12 முதல் பிற்பகல் 2 மணி வரை மலிவு விலை மதிய உணவு கிடைக்கும். குறைந்தது 500 பேருக்காவது மதிய உணவு வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of