மகாராஷ்டிராவில் 60 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா..!

594

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி உள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு முழுவதும் உச்சக்கட்டத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பில் அதிக சேதங்களை சந்தித்து வரும் மாநிலம் மகாராஷ்டிரா. இங்கு இன்று ஒரே நாளில் 2,598 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,546 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் அங்கு 85 பேர் கொரோனா வைரசுக்கு பலியாகி இருக்கின்றனர்.

அதனால் மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 1,982 ஆக உயரந்துள்ளது. 698 பேர் இன்று கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 18,616 ஆக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளதாக அம்மாநிலத்தின் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Advertisement