மகாராஷ்டிரா முதல்வர் மனைவியின் செல்ஃபி மோகம்

609

மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா கப்பலின் ஆபத்தான பகுதியில் செல்பி எடுத்தது தொடர்பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மும்பை கடல் பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்தை மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் துவங்கி வைத்தனர்.

முதலமைச்சர் பட்னாவிஸின் மனைவி அம்ருதாவும் விழாவில் கலந்து கொண்டார்.

சொகுசு கப்பலின் அழகை கண்டு வியந்த அம்ருதா, கப்பலில் நின்று கொண்டு, விதவிதமாக செல்பி எடுத்து கொண்டார்.

மேலும், கப்பலின் தடை செய்யப்பட்ட ஆபத்தான பகுதியில் நின்று கொண்டு செல்பி எடுக்க முற்பட்டார். இதனால், உடனிருந்த பாதுகாவலர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.

செல்பி மோகத்தால் மகாராஷ்டிரா முதலமைச்சர் அம்ருதா நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும், பட்னாவிஸின் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of