அணையை உடைத்த நண்டுகள்! அமைச்சரின் அபார பதில்!

903

மகாராஷ்டிராவில் உள்ள திவாரி என்ற அணை அன்மையில் உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. வெள்ளத்தில் சிக்கி 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் தானாஜி சாவந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அணை உடைந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர், அணையில் அதிக எண்ணிக்கையில் நண்டுகள் இருந்ததே இந்த உடைப்புக்கு காரணம் என்றும், அணை உடைப்புக்கு முந்தைய நாளில் மட்டும், கனமழையால் அணையின் நீர் மட்டம் 8 மீட்டருக்கு உயர்ந்ததாகவும் தெரிவித்தார்.

இவரின் இந்த விளக்கத்தை விமர்சித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், அணையை கட்டிய கான்ட்ராக்டர் எனும் பெரிய ஊழல் சுறாவை காப்பாற்றுவதற்காக அமைச்சர் அப்பாவி நண்டுகள் மீது பழிபோடுவதாக தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of