சென்னை பிரதான சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு

300

சென்னை மத்திய கைலாஷ் அருகே சாலையில் பள்ளம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

சென்னை மத்திய கைலாஷ் திருவான்மியூர் சந்திப்பு சிக்னல் அருகே சாலையில் பாதாள சாக்கடை தோண்டியுள்ளனர்.அப்பொழுது அந்த சாலையில் திடீரென விரிசல் ஏற்பட்டு மிகப்பெரிய பள்ளம் விழுந்தது.

இதனால் அங்கு வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பள்ளம் விழுந்த இடத்தில் காவல்துறை தடுப்புகளை போட்டு எச்சரிக்கை அறிவிப்பு செய்துள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளத்தை விரைவில் சரிசெய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of