என்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம்

453

தம்முடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என அதிபர் மைத்திரிபால சிறிசேன பேசியுள்ளது இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிபர் சிறிசேன,தாய்நாட்டிற்கு சிறந்த அரசியல் எதிர்காலத்தைக் கொண்டுவருவதற்காகவே தாம் இருப்பதாகவும், தன்னை கெட்டவராக காட்ட முயற்சிப்பவர்கள் நாளை அல்லது எதிர்காலத்தில் தான் சிறந்த மனிதன் என்பதை அறிந்துகொள்வார்கள் என கூறினார்.

எதிர்காலத்தில் சிறந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்பிக்கை வைத்துள்ள இலங்கை மக்கள் மீது தான் நம்பிக்கை வைத்துள்ளதாக குறிப்பிட்ட சிறிசேன,தாம் அதிகாரத்தில் வந்த நபர் அல்ல.

அதிகாரத்தில் இருந்து வெளியேற விரும்பும் ஒருவர் எனவும், இந்த சூழலில் தம்முடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் எனவும் கூறினார். அதிபர் சிறிசேனவின் இந்த பேச்சு இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of