நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்க தயார் – சிறிசேன

293

நாடாளுமன்றத்தை கலைத்தது தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் என அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், இதனை தெரிவித்தார்.

மேலும் தனிநபர் என்ற வகையில் அரசியலமைப்பின் வழியாக அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்கள் தொடர்பில் தான் மகிழ்ச்சியடையவில்லை என்றும், வலுவான ஜனநாயக நாட்டில் அவ்வாறு இடம் பெறக்கூடாதெனத் தெரிவித்தார்.