பாரிஸ் நகரை உறைய வைத்த பயங்கர சத்தம்..! நிறுத்தப்பட்ட டென்னிஸ் மேட்ச்..!

3984

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய நேரப்படி மாலை 4 மணி அளவில் போட்டி சுமூகமாக நடைபெற்று வந்தது. அப்போது, திடீரென பயங்கர சத்தம் கேட்டது.

பயங்கர குண்டு வெடித்தால் எப்படி சத்தம் கேட்குமோ? அதுபோன்று சத்தம் கேட்டது. இந்த இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். இதையடுத்து, தற்காலிகமாக டென்னிஸ் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.

விளையாட்டு மைதானத்தில் மட்டும் தான் இந்த சத்தம் கேட்டதா என்று பார்த்தால், பாரிஸ் நகரம் முழுவதுமே கேட்டிருக்கிறது. பின்னர் விசாரணையில் அதீநவின விமானத்தில் இருந்து வெளிப்பட்ட சத்தம்தான் இதற்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர். இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.