மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்ததாக மாற்றுங்கள் – உயர்நீதிமன்றம்

235

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது, நடைபாதை வியாபாரிகள் சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்துவது தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மெரினா கடற்கரையில் தற்போது வரை ஆயிரத்து 486 கடைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டிருப்பதாகவும் லூப் சாலையில் இரண்டு ஏக்கரில் மீன் சந்தை கட்ட இருப்பதாகவும், பின்னர் அங்குள்ள மீன் கடைகளை ஒழங்குபடுத்தி மீன் சந்தைக்கு மாற்றப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மெரினா கடற்கரை வணிகத்தளம் அல்ல என தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரை  மக்களுக்கானது என தெரிவித்தனர். மேலும், அடுத்த 6 மாத காலத்திற்குள் மெரினா கடற்கரையை உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் என்றும் இதற்காக மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முழு சுதந்திரம் வழங்குவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் கடற்கரை கடைகளை நேர்நிலையாக மாற்றி அமைப்பது குறித்தும், மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்தும் டிசம்பர் 13-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை டிசம்பர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of