முதல் தேர்தலிலேயே முத்திரை! இத்தனை தொகுதிகளில் 3-ஆம் இடமா? மகிழ்ச்சியில் தொண்டர்கள்!

1332

பாராளுமன்ற தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர். இவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை செய்தார்.

இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் 11 இடங்களில் 3-ஆம் இடம் பிடித்துள்ளனர்.

அதன் விவரம் பின்வருமாறு:-

வட சென்னையில் 1,02,659,

தென் சென்னையில் 1,32,475,

மத்திய சென்னையில் 92,047,

ஸ்ரீபெரும்புதூரில் 84,837,

சேலத்தில் 57,840,

நீலகிரியில் 41,169,

திருப்பூரில் 64,657,

கோவையில் 1,44,816,

பொள்ளாச்சியில் 59,545,

ஈரோட்டில் 47,719,

திருவள்ளூரில் 66,224

வாக்குகளைப் பெற்று மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர். கட்சி ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 12 தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்தது அக்கட்சி தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement