குறை சொல்லி ஓட்டுக்கேட்க மாட்டோம்! கமலின் செம்ம டெக்னிக்! சூடு பிடிக்கும் பிரச்சாரம்!

825

விழுப்புரம் தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் வழக்கறிஞர் அன்பின் பொய்யாமொழி மற்றும் ஆரணி தொகுதி வேட்பாளர் சாஜித் ஆகியோரை ஆதரித்து திண்டிவனத்தில் அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது கமல் பேசுகையில்,

“மற்றவர்களின் குறைகளை சொல்லி நாங்கள் ஓட்டுக் கேட்க மாட்டோம். எங்களின் நிறைகளை சொல்லி ஒட்டுக் கேட்ப்போம். நாங்கள் உங்களை தேடி வந்திருக்கிறோம். மக்கள் நீதி மய்யம் இப்போது வீறுடை போடுவதற்கு உங்கள் அன்பு தான் காரணம்.

உங்கள் தேவைகளை அறிந்தவர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் அன்பின் பொய்யாமொழி. உங்களுக்ககாக போராடியவர். இனியும் போராடுவார். இதேபோல் தான், ஆரணி வேட்பாளர் சாஜித். மக்களுக்காக போராடக்கூடியவர்.

இந்த இருவரும் தமிழகத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்வார்கள். அவர்களின் குரல் டெல்லியிலே ஒலிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. எங்கள் கட்சி வேட்பாளர் வெற்றி பெற்ற பின், அவர் பணி சரியில்லை என்றால், உடனே பதவியை ராஜினாமா செய்த கடிதத்தை உங்களிடம் அளிப்போம்.

ஆனால் அது நிகழக்கூடாது என்பதற்காக நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை நாங்களே உங்கள் சார்பாக வேட்பாளர்களிடம் கேட்டுவிட்டோம். இங்கே பணப்பட்டுவாடா இருக்காது. ரகசியமாக காவல்துறைக்கு தெரியாமல் உங்கள் கையிலே பணத்தை வைக்கும் வேலை இருக்காது.

ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து பாருங்கள். நாங்கள் உங்களுக்கு கொடுத்திருப்பது பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 5 ஆயிரம், 10 ஆயிரத்துக்கு வாக்கை கொடுத்துவிட்டால், ஐந்து வருடத்துக்கு உங்களை விற்றுவிடுகிறீர்கள்.

அந்த ஐந்து வருடத்தை நீங்கள் வாங்கிய தொகையை வகுத்து போட்டால் ஒரு வேளை சாப்பாட்டுக்கு கூட வராது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். உங்கள் ஏழ்மையை புரிந்து கொண்டு, உங்கள் வறுமையை பயன்படுத்தி, பணத்தை காட்டி அன்றைக்கான வேலையை முடித்துக் கொள்கிறார்கள்.

தயது செய்து ஓட்டுக்காக அந்த பணத்தை வாங்காதீர். அவர்கள் உங்களுக்காக ஒதுக்கப்படும் தொகையில் இருந்து எடுத்துக்கொள்வார்கள்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of