ம.நீ.ம-க்கு வந்த சோதனை! இன்னும் எத்தனை பேர் ராஜினாமா பன்னுவாங்க?

981

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மக்கள் நீதி மய்யம் தனித்து இத் தேர்தலை எதிர்கொள்கிறது. இக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் முழுக்க, தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

நிர்வாகிகள் அவ்வப்போது கட்சியிலிருந்து விலகுவது பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது அந்த கட்சிக்கு. முதலில் பெரிய அடி குமரவேல் ரூபத்தில் வந்தது.

இந்நிலையில், நெல்லை மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இன்று திடீர் ராஜினாமா செய்துள்ளார். நெல்லை மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகர ராஜாவும் ராஜினாமா செய்துள்ளார்.

அதேநேரம், விருதுநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் என்பவரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமையுடன் மோதல் போக்கை கடைபிடித்துள்ளார்.

அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கட்சி விரோத நடவடிக்கை இதற்கு காரணம் என்றும், அக்கட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.