தமிழகத்தில் தவித்த மலேசிய தமிழர்கள்..! தனி விமானத்தை அனுப்பி வைத்த தொழிலதிபர்..!

389

கொரோனாவால் உலகம் அச்சத்தில் இருக்கும் நிலையில், வெளிநாடுகளுக்கு சென்றவர்களை தனி விமானம் மூலம் அவரவர்களின் அரசுகள் மீட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகம் வந்த 179 மலேசியா வாழ் தமிழர்கள், விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தவித்து வந்தனர்.

இதனை அறிந்த மலேசியா தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ் குமார், தனது சொந்த செலவில் தனி விமானம் ஒன்றை தயார் செய்தார்.

பின்னர், இரு நாட்டு அரசுகளிடமும் விவரத்தை எடுத்துக்கூறி அனுமதி பெற்றார். இதையடுத்து, 179 பேரும் அந்த தனி விமானம் மூலம் மலேசியாவிற்கு சென்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of