“நாய்க்கும் கரடிக்கும் வித்தியாசம் தெரியாதா?” சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடகி!

570

மலேசியா நாட்டை சேர்ந்தவர் சோபியா. இவர் அந்த பிரபல பாடகியாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் அவரது பணியை முடித்து விட்டு, அவரது வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது, அவர் ஒரு நாய்க்குட்டியை பார்த்துள்ளார். அதற்கு அடிப்பட்டதை கண்ட சோபியா அந்த குட்டியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்று சிகி;ச்சை அளித்தார். பின்னர் அதை வெளியில் விட்டு விட மனமில்லாத சோபியா, தன் செல்லப்பிரானியாக வளர்த்து வந்தார்.

இந்நிலையில் அவர் வளர்த்து வந்த செல்லப்பிரானியை சிலர் வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ வெளியானதில் இருந்து இணையதளங்களில் வைரலாக பரவி வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர், சோபியாவின் வீட்டுக்கதவை தட்டியுள்ளனர்.

அப்போது தான் தெரிந்தது, அந்த வீடியோ வைரலானதற்கான காரணம். ஆம், அது நாய்க்குட்டி இல்லையாம், அது கரடிக்குட்டியாம். இதனால் அந்த கரடிக்குட்டியை வனத்துறையினர் எடுத்து சென்றனர்.

மேலும் சோபியாவை அதிகாரிகள் கைது செய்தும் விட்டனர். இதுகுறித்து சோபியாவிடம் கேள்வி எழுப்பியதற்கு, நான் நாய்க்குட்டி என்று நினைத்து தான் அந்தக்குட்டியை வளர்த்தேன். நீங்கள் வந்து சொன்ன பிறகு தான் அது கரடிக்குட்டி என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் மலேசியா முழுவதும் படு ஜோராக வைரலாகி வருகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of