மலேசியா ஓபன் பேட்மிண்டன், காலிறுதியில் தோல்வியை தழுவிய ஸ்ரீகாந்த்

506

மலேசியா ஓபன் பேட்மிண்டனில் இந்தியாவின் முன்னணி வீரரான ஸ்ரீகாந்த் கிதாம்பி காலிறுதியில் ஒலிம்பியன் சாம்பியனான சீனாவின் சென் லாங்கை எதிர்கொண்டார். இதில் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் 16-11 என முன்னணியில் இருந்தார். அதன்பின் சீன வீரர் சென் லாங் 2 புள்ளிகள் மட்டுமே விட்டுக்கொடுத்து 10 புள்ளிகள் பெற்று 21-18 எனக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் ஸ்ரீகாந்த் 7-11 என பின்தங்கியிருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19-19 என சமநிலைப் பெற்றார். ஆனால் வெற்றிக்கான இரண்டு புள்ளிகளை சென் லாங் பெற்று 21-19 எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார்.