மாலத்தீவு தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகீம் முகம்மது வெற்றி

649

மாலத்தீவு தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி தலைவர் இப்ராகீம் முகம்மது வெற்றி பெற்றார்.

ஆயிரத்து 192 குட்டித்தீவுகளை கொண்ட தெற்காசிய நாடான மாலத்தீவில் அதிபர் அப்துல்லா யாமீன் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ஆளும் கட்சியான மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபர் யாமீனும், எதிர்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சார்பில் இப்ராகிம் முகமதுவும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான 92 சதவீத வாகுகள் உடனடியாக எண்ணப்பட்டன. மாலத்தீவில் சமீப காலமாக சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள சூழலில், தேர்தல் முறையாக நடத்தப்படாவிட்டால், பொருளாதார தடை விதிக்கப்படும் என ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், எச்சரித்து இருந்தன.

உலக நாடுகளின் நெருக்கடிக்கு மத்தியில், பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் எதிர்கட்சியின் இப்ராகிம் முகமது 58 புள்ளி 3 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்ராகிம் முகமது ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 808 வாக்குகளும், அதிபர் அப்துல்லா யாமீன் 95 ஆயிரத்து 526 வாக்குகளும் பெற்றுள்ளனர். மேலும் அண்மைக்காலமாக இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அப்துல்லா யமீன் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இப்ராகீம் முகம்மது வெற்றியை அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement