மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

3041

மிகப்பெரிய மால்கள் போன்ற இடங்களுக்கு போனால் ஆகும் செலவுகளை விட, அங்கு நிறுத்தப்படும் பார்க்கிங் செலவுகளுக்கு பயந்தே பலரும் மால்களுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

இருந்தாளும் மால்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது, அது வேறு கதை. அவ்வளவு அதிகமாக மால்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு சில மால்களில், மணிக்கணக்குகளில் கட்டணம் வசூலிக்கப்படுவதும் உண்டு.

இந்த மாதிரியான பிரச்சனை இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து வருகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய மால்கள், வணிக நிறுவனங்கள், மற்றும் திரையரங்குகள் போன்றவற்றில் வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவை எதிர்த்து வணிக நிறுவனங்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் வாகன கட்டணம் குறைவாக வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு மனு காவல்துறையினர் சார்பில் வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குஜராத் நகர திட்டமிடல் மற்றும் நகர வளர்ச்சி சட்டத்தின் கீழ் மால்கள், திரையரங்குகள் போன்ற பெரிய வணிக வளாகங்கள், வாகனங்களை பார்க் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of