மம்தாவும் இந்த வேலைய செஞ்சிட்டாங்க..! வைரலாகும் வீடியோ..!

461

அரசியல் தலைவர்களில் முக்கியமான ஒருவராக பார்க்கப்படுபவர் மம்தா பனார்ஜி. மேற்கு வங்க முதல்வராக இருக்கும் இவர், அம்மாநிலத்தின் கிராம பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று திகா என்ற பகுதியில் உள்ள சிறு கிராமத்தை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த டீ-க்கடைக்குள் சென்ற மம்தா, தீடிரென டீ போட ஆரம்பித்தார். பிறகு தான் தயார் செய்த டீயை தனது தொண்டர்களுக்கும், அங்கிருந்த மக்களுக்கு பரிமாறினார்.

இதுதொடர்பான வீடியோவை மம்தா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு:-

“சில சமயங்களில் நாம் செய்யும் சிறிய செயல் நம்மை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

அவற்றில் ஒன்றுதான் நாமே டீ போட்டு மற்றவர்களுக்கு பரிமாறுவது.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of