குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் – மம்தா பானர்ஜி..!

967

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருந்தாலும், மாநில அரசுகள் மீது பா.ஜ.க அதனை திணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். எனவே இந்த சட்டத்தை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

மேலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வரும் 16 முதல் 18ஆம் தேதி வரை, மேற்குவங்க மாநிலத்தில் மாபெரும் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement