மம்தா கர்வம் பிடித்தவர்.., பேச மறுத்துவிட்டார்.., மோடி பகீர் 

304

ஒடிசா மாநிலத்தில் ‘பானி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இப்போதுதான் பார்த்துவிட்டு வருகிறேன். இந்த புயல் பாதிப்பு குறித்து மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியிடம் தொலைபேசியில் விவாதிக்க விரும்பினேன். அதற்காக அவருக்கு போன் செய்தேன்.

ஆனால், தீதி (மம்தா) கர்வம் பிடித்தவர். என்னுடன் பேச மறுத்துவிட்டார். அவர் தொலைபேசியில் அழைப்பார் என்று காத்திருந்தேன். ஆனால், அவர் அழைக்கவே இல்லை.

மம்தா பானர்ஜி வேகத்தடை போன்றவர். அவர் மலிவான அரசியல் செய்வதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார். மாநில அரசு அதிகாரிகளுடனாவது விவாதிக்க விரும்பினேன். ஆனால், அதையும் மாநில அரசு அனுமதிக்கவில்லை.

மசூத் அசார், சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காக மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகளை மம்தா பானர்ஜி பாராட்டவில்லை. அப்படி பாராட்டுவது, தனது ஓட்டு வங்கியை பாதிக்கும் என்று அவர் பயப்படுகிறார்.

‘ஜெய் ஸ்ரீராம்’ என்று உச்சரித்தாலே சிறையில் அடைக்கும் நிலைமைதான் மேற்கு வங்காளத்தில் இருக்கிறது என தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of