தேர்தலுக்காக போர் செய்யக்கூடாது! மம்தா பானர்ஜி நறுக்!

344

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, புல்வாமா தாக்குதலுக்கு பிறகும், தீவிரவாதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிறகும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட பிரதமர் மோடி முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

பாதுகாப்பு படைக்கு தோள் கொடுக்க எதிர்கட்சிகள் தயாராக உள்ளதாக மம்தா கூறியுள்ளார். 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஊடகத்தில் வெளியான தகவல் உண்மையா இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பன்னாட்டு ஊடகத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று செய்திகள் வருவதை மம்தா சுட்டிக்காட்டியுள்ளார். எது உண்மை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அரசியல் மற்றும் தேர்தல் காரணங்களுக்காக போர் நடத்தக்கூடாது என்று மம்தா தெரிவித்துள்ளார். உரி மற்றும் பதான்கோட்டில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பதில் தாக்குதல் நடைபெறவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

புல்வாமா தாக்குதல் தொடர்பான தகவல் முன்கூட்டியே கிடைத்தும் வீரர்களை காப்பாற்ற மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை மம்தா குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of