“குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டிப்பாக அனுமதிக்கமாட்டேன்..” மம்தா பானர்ஜி திட்டவட்டம்..!

602

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மேற்கு வங்க சட்டப்பேரவையில் அரசு சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

அப்போது, பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிறுபான்மை மக்கள் மட்டும் போராடவில்லை என்று தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் CAA, NPR, NRC ஆகியவற்றை அனுமதிக்கமாட்டேன் என கூறிய அவர், இவற்றிற்கு எதிராக அமைதியான முறையில் போராடுவேன் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பெருவாரியான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் CAA-க்கு எதிரான தீர்மானம், கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து, மேற்கு வங்க சட்டப்பேரவையிலும் நிறைவேறியது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of