தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள்..! மம்தா செம speech..!

428

திமுகவின் மறைந்த தலைவர் மு.கருணாநிதியின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம். நான் நிறையவே தமிழ் கற்க வேண்டும். இனி நான் தமிழகம் வரும்போது கட்டாயம் தமிழ் படித்துவிட்டு வருவேன். நாம் அனைவருமே இந்தியர்கள். ஆனால், நமக்கென்று தாய்மொழி உள்ளது. நானும், ஸ்டாலினும் இந்தியர்கள்தான்.

அதற்காக எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது. தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும். காரணம் அவர்கள் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள்.

தைரியானவர்கள்கூட. சிறந்த நோக்கத்துக்காக போராடுகிறீர்கள். உயிரை துச்சமென மதித்து போராடுகிறீர்கள். எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of