“என் தொலைபேசியை ஒட்டு கேட்குறாங்க” – மம்தா பானர்ஜி

366

தமது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

இஸ்ரேல் நிறுவனம் உருவாக்கியுள்ள மென்பொருளை பயன்படுத்தி சில உளவு நிறுவனங்கள் உலகம் முழுவதும் 1,400 பேரின் தகவல்களை திருடி இருப்பதாகவும், இந்தியாவில் மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட பலருடைய வாட்ஸ்-அப் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாகவும் வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சினையில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, தமது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். உளவு பார்த்த நிறுவனம் தனிநபர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு வழங்கி இருக்கிறது என்றும் இது தவறான நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளார்.

தனிநபர் சுதந்திரத்தில் யாரும் குறுக்கிட முடியாது என்று கூறியுள்ள மம்தா பானர்ஜி, எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு இதுபோன்று நடைபெறாமல் பிரதமர் மோடி தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of