மம்மூட்டிக்கு பெயரே கிடையாதா? – வெளியான சுவாரஸ்ய தகவல்..!

441

தமிழ், மலையாளம் என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மெஹா ஸ்டார் மம்மூட்டி.

ரஜினியுடன் இவர் இணைந்து நடித்த தளபதி படம் இன்றுவரை பிரபலம். இந்நிலையில் மாமாங்கம் என்ற படத்தில் நடித்துவருகிறார் மம்மூட்டி. இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

மலையாளத்தில் உருவான இந்த திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது. பத்மகுமார் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரபல இயக்குனர் ராம் தமிழ் பதிப்புக்கான வசனம் எழுதியுள்ளார்.

பொதுவாக ஒரு படம் என்றாலே அந்த படத்தில் கதாநாயகனின் பெயர் சிறப்பு அந்தஸ்தை பெரும். ஆனால், இந்த படத்தில் மம்மூட்டிக்கு பெயரே கிடையாதாம். படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரத்திற்கு பெயரே இல்லை என்பது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.

இதுதான் இந்த படத்தின் சிறப்பு என நடிகர் மம்மூட்டி கூறியுள்ளார். இந்த படத்தில் மம்மூட்டி ஒரு போர் வீரராக நடித்துள்ளாராம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of