மக்களிடம் வாக்குகளை பெற மோடி கருப்புப் பணத்தை பயன்படுத்துகிறார்! மம்தா பகீர் குற்றச்சாட்டு!

460

பிரதமர் நரேந்திர மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கடும் சவால் கொடுத்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னர் அனைத்து எதிர்கட்சிகளையும் ஒருங்கிணைத்து கொல்கொத்தாவில் மாபெரும் பேரணியையும் மாநாட்டையும் நடத்தி காண்பித்தார்.

இந்நிலையில் நேற்று மேற்குவங்க மாநிலம் சேராம்போர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட மம்தா மக்களவை தேர்தலில் பாஜக தோல்வியை தழுவ போவது நிச்சயம். அது பாஜகவுக்கும், மோடிக்கும் நன்கு தெரிந்து விட்டது. ஆகவே தோல்வியை தழுவுவதை தவிர்க்க பல முறைகேடுகளை பாஜகவும், மோடியும் கையாண்டு வருகிறார்கள்.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றி வைத்துள்ளார்கள். தற்போது மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக அந்த பணத்தை மக்களுக்கு கொடுத்து வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர்.

அதோடு பல மாநிலங்களிலும் சமூக விரோதிகளையும் குண்டர்களையும் வைத்து வாக்காளர்களை மிரட்டி பணிய வைக்கின்றனர். இப்படி பணிய வைத்து பாஜகவுக்கு வாக்குகளை வாங்க முயற்சிக்கின்றனர். பாஜகவின் இந்த சதி செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பேசினார்.