அமித்ஷா என்ன பெரிய……,! அவரை எதிர்க்கக்கூடாதா? ஆவேசம் அடைந்த மம்தா!

714

கொல்கத்தாவில் நேற்றைய தினம் சாலை பிரசாரத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா முன்னெடுத்தார். அப்போது கொல்கத்தா பல்கலைக்கழகம் வழியாக அமித்ஷாவின் வாகனம் சென்று கொண்டிருந்தது.

இதையடுத்து அங்கிருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாணவரணியினர் அந்த பல்கலைக்கழக வாயிலில் நின்று கொண்டு அமித்ஷாவே திரும்பி போ என பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். இதனால் பாஜக மாணவர் அமைப்பினருக்கும் திரிணமூல் கட்சியின் மாணவரணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் வித்யாசாகரின் மார்பளவு சிலை உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் மோதல் நடந்த இடங்களை மம்தா பானர்ஜி பார்வையிட்டார்.

அப்போது அவர் கூறுகையில்

“கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பாரம்பரியம் குறித்து அமித்ஷாவுக்கு தெரியுமா.
இந்த பல்கலைக்கழகத்தில் எத்தனை பெரிய பிரபலங்கள் படித்தனர் என தெரியுமா.

இதுபோன்ற தாக்குதல் நடத்தியதற்கு அவர் வெட்கப்பட வேண்டும். யாரும் அவரை எதிர்த்து போராட்டம் நடத்த கூடாது என சொல்வதற்கு அவர் என்ன பெரிய கடவுளா.”

என்று அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of