ஆவணங்களை பாதுகாக்க தெரியாத பிரதமருக்கு மக்களை எப்படி பாதுகாக்க முடியும்? – மம்தா கேள்வி

230

ரஃபேல் விமான ஒப்பந்த ஆவணங்களை பாதுகாக்கத் தெரியாத பிரதமருக்கு எப்படி நாட்டு மக்களை எப்படி பாதுகாப்பார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரம் தொடர்பான ஆவணங்கள் திருடப்பட்டு விட்டதாக அண்மையில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த ஆவணங்கள் திருட்டு போகவில்லை என்றும் அதை நகல் மட்டும் எடுத்துள்ளனர் என்றும் மத்திய அரசு சார்பில் மாற்றி கூறியுள்ளனர்.

இந்த நிலையில் ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு பொய்களை கூறுவதாக ப.சிதம்பரம் கூறிய நிலையில் தற்பொழுது மம்தா பேனர்ஜி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.