பாதுகாப்பு படையினரின் வேலையா இது! அவர்களுக்கு வெட்கமாக இல்லையா! மம்தா காட்டம்!

602

மேற்கு வங்காள மாநிலம் பர்கானா மாவட்டத்துக்குட்பட்ட பசந்தி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அதில் பேசிய அவர், பாதுகாப்பு படையினரின் சீருடையை அணிந்து கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தமக்கு மத்திய பாதுகாப்பு படையினர் மீது தனி மதிப்பு உள்ளது. அவர்களை அவமதிக்க நினைக்கவில்லை. ஆனால் அவர்களை கருவியாக வைத்து வாக்காளர்களை கடைசி நேரத்தில் மூளைச்சலவை செய்ய, மத்திய அரசு பயன்படுத்துவதாக புகார் தெரிவித்தார். தோற்று விடுவோம் என்ற பயத்தில் மேற்குவங்கத்தில் மோடி அரசு பல ஏமாற்று வேலைகளை செய்து வருகிறது.

இதில் ஒரு பகுதியாக தான் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்துகிறோம் என்ற பெயரில், பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரை இங்கு குவித்துள்ளது.

பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று சொல்வதுதான் மத்திய பாதுகாப்பு படையினரின் வேலையா, இவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு வெட்கமாக இல்லையா என வினவிய மம்தா, இன்று மோடி ஆட்சியில் இருப்பதால் இவ்வாறு நடக்கலாம்.

ஆனால் மாற்றம் ஏற்பட்டு வேறு ஒருவர் ஆட்சிக்கு வந்தால் உங்கள் நிலை என்னவாகும் என யோசித்தீர்களா என கேள்வி எழுப்பினார். மம்தா பார்ஜியின் இந்த பரபரப்பு குற்றசாட்டை பாரதிய ஜனதா திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

1
Leave a Reply

avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
Lali Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Lali
Guest

Why this lady going for cheap publicity? She is not behaving like a CM. KEELTHARAMANA ARASIAL. MAD LADY.