மனைவியை காப்பாற்ற முடியாத மோடி! நாட்டை காப்பாற்ற முடியுமா! மம்தா பானர்ஜி!

605

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணிக்கோ அல்லது காங்கிரஸ் கூட்டணிக்கோ பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிரதமர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கலாம் என்ற எண்ணம் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட சில தலைவர்களுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலம் அலிபூர்தார் மாவட்டத்தில் உள்ள பரோபிஷா என்ற இடத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளில் எதையும் பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அவர் பொய் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

தனது மனைவியை கவனித்துக்கொள்ள முடியாத ஒருவரால், இந்த நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற முடியும்.இந்த நாட்டையும், மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றால் இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தோற்கடிக்கப்படவேண்டும்.

தேர்தலுக்கு பிறகு மத்தியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும்.”

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.