மோடியின் மனைவிக்கு புடவை பரிசளித்த மம்தா!

465

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தின் நிலை மற்றும் பல விஷயங்கள் பற்றி பிரதமரிடம் மம்தா பேசவுள்ளதாக சர்ச்சை கிளம்ப மேற்குவங்க மாநிலத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிதி குறித்தே பிரதமரிடம் பேச இருக்கிறேன்.அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம், பொதுத்துறை வங்கிகள் இணைப்பு, ஏர் இந்தியா, பி.எஸ்.என்.எல், ரயில்வே உள்ளிட்ட நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அவரிடம் கோரிக்கை வைப்பேன்” என நேற்று இரவு கொல்கத்தாவில் விமானம் ஏறும் முன்பு விளக்கமளித்தார்.

இதற்கிடையே, டெல்லி செல்வதற்கு முன்பு விமான நிலையத்தில் வைத்து பிரதமர் மோடியின் மனைவி யசோதா பென்னை தற்செயலாக சந்தித்திருக்கிறார், மம்தா.ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையான யசோதா பென், மேற்கு வங்காளத்தின் அசான்சோல் பகுதியிலுள்ள கோயிலுக்கு பிரார்த்தனைக்காக வந்துள்ளார். இந்தப் பூஜையை முடித்துவிட்டு திரும்பும்போதுதான் கொல்கத்தா விமான நிலையத்தில் எதேச்சையாக மம்தாவுடன் சந்திப்பு நடந்துள்ளது.

அப்போது, யசோதா பென்னின் பிரார்த்தனை குறித்து கேட்ட மம்தா, அவரிடம் கொல்கத்தாவின் காளிகாட், தக்‌ஷினேஸ்வர் பகுதிகளிலுள்ள மிகப் பிரபலமான கோயிலுக்குச் சென்றாரா எனக் கேட்டு தெரிந்துகொண்டதோடு அடுத்த முறை கொல்கத்தா வரும்போது  தன்னிடம் முன்பே தகவல் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது இருவரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்ததாகவும், மோடியின் மனைவிக்கு கொல்கத்தாவின் இனிப்புகளையும், மேற்கு வங்காளப் பாரம்பர்யப் புடவை ஒன்றையும் மம்தா பரிசளித்ததாக மம்தாவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்ததாக பி.டி.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of