கணவனின் விபரீத ஆசை! மனைவி எடுத்த அதிரடி முடிவு! இறுதியில் வெளியான மர்மம்!

3832

சென்னை விருகம்பாக்கம் அடுத்த சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் அஜித்குமார்(47). இவரது மனைவி தேவிகா. இவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அஜித்குமாரை கைது செய்தனர்.

இதையடுத்து அஜித்குமாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், இவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து, ஏமாற்றியிருப்பது தெரிய வந்தது.

3 பெண்களை திருமணம் செய்து, 4-வதாக இன்னொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.