சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

178

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள மேலக்கண்டமங்கலம் தனியார் ஸ்பின்னிங் மில் குடியிருப்பில் வசித்து வருபவர் மாரியம்மாள் இவர் தனது 5 வயதே ஆன பேத்தியுடன் தனியாக வசித்து வருகிறார்.இந்நிலையில் மாரியம்மாள் தனது பேத்தியை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் அருகில் வசிக்கும் முருகன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையைக்கு ஆசை வார்த்தை கூறி அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

வேலை முடித்து வீடு திரும்பிய பாட்டி,சிறுமி சோர்வாக இருந்ததை கண்டு விசாரித்துள்ளார். சிறுமி பக்கத்து வீட்டில் வசிக்கும் முருகன் தாத்தா என்பவர் தன்னிடம் நடந்து கொண்ட விதம் குறித்து பாட்டியிடம் விவரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பாட்டி திருச்சுழி காவல் கண்காணிப்பாளர் சசிதரனிடம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் கண்காணிப்பாளர் சசிதரன் மற்றும் காவல்துறையினர் குற்றவாளி முருகனை மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.