துரத்திய போலீஸ்.. தாக்கி விட்டு தப்பித்த துரைப்பாண்டி.. சிக்கினால் இருக்கு!

623

மதுரை காளவசால் பகுதியை சேர்ந்த முத்து இவரது மகன் துரைப்பாண்டி என்கிற பாண்டி வயது 26.

இவர்  மதுரை சுற்றுவட்டாரத்தில் கைதேர்ந்த திருடன்.இவர் மேல் டூவிலர் திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகள் பல மாவட்டங்களில் பல வழக்குகள் உள்ளன. இது போல் சூலூரில் திருடும் போது போலீசார் மடக்கி பிடித்தனர்.அவனை கைது செய்து கோர்ட்டுக்கு கொண்டு செல்லும் போது போலீசாரின் பிடியில் இருந்து திடீரேன ஒடும் ஜீப்பில் இருந்து குதித்து தப்பித்து விட்டார். இதனை போலீசார் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை.

தப்பித்த பாண்டியை போலீசார் பிடிக்க முயன்ற போது அவனிடம் இருந்த கத்தியை வைத்து போலீசாரை கழுத்து மற்றும் கைகளில் தாக்கி விட்டு தப்பித்து ஒடி விட்டான்.இதனால் தீவிரமாக தேடும் பணியில் போலீசார் களம் இறங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக பாண்டியின் போட்டோவை போலீசார் வெளியிட்டு இவனை எங்கு பார்த்தாலும் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு Tr.Balamurugan-9498102041,8072087450 அழைக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

என காவல் துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு வேகமாக தேடுவதை பார்த்தால் பாண்டி மாவு கட்டுத்தான் போடனும் போல தெரிகிறது.