காதலன் மீது காதலி புகார்.. போலீசாரை நடுங்க வைத்த காதலன்

2695

சென்னை அடுத்த அனகாபுத்தூர், காமராஜபுரத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவரும் ஆரோக்கியராஜ் இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் ஆரோக்கியராஜ் அவ்வப்போது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவி ஐஸ்வர்யாவை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா எவ்வளவோ சொல்லியும் கேட்காத நிலையில், அவர் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே நடந்த சம்பவங்கள் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஐஸ்வர்யா வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த கணவர் ஆரோக்கியராஜ் என் மீதே புகார் கொடுக்க பாக்குறீயா? அப்படி செய்தால் நான் செத்து விடுவேன்’ எனக்கூறி திடீரென பிளேடால் கையில் நான்கு இடங்களில் அறுத்துக் கொண்டார்.

இதனை எதிர்பாராத காவலர்கள் உடனடியாக அவரிடம் இருந்த பிளேடை பறிமுதல் செய்ததோடு, அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of