வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பிய மனைவி..,! கணவன் எடுத்த விபரீத முடிவு..,!

660

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்தவர் சோனு. இவருக்கும் அஞ்சலி என்ற பெண்ணிற்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளது.

இந்நிலையில் சோனுவின் மனைவி அஞ்சலி, வாட்ஸ் அப்பில் அவரது ஆண் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டுள்ளார். இதற்கு சோனு கடுமையாக கண்டித்துள்ளார். இருப்பினும் அவர் மெசேஜ் அனுப்புவதை விடவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சோனு, தனது மனைவிக்கு கொசு மருந்து கொடுத்து குடிக்க வைத்துள்ளார்.

கொசு மருந்தை குடித்த அஞ்சலி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் போது, கழுத்தை நெறித்து சோனு கொலை செய்துள்ளார். பின்னர் அஞ்சலியின் பெற்றோர் அஞ்சலியை காணவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர், விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சோனு தான் அஞ்சலியை கொலை செய்தார் என்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவமானது உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of