சிங்கப்பூரில் சிறுமியை பாலியல் பலத்காரம் செய்த இந்தியருக்கு 13 ஆண்டு ஜெயில்

73

இந்தியாவை சேர்ந்தவர் உதயகுமார் தட்சணாமூர்த்தி (31). இவர் சிங்கப்பூரில் தங்கி ஒரு சிறிய கடையில் வேலை பார்த்து வருகிறார். தங்கியிருந்த குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியுடன்  பழக்கம் ஏற்பட்டது.

ஆனால் இவரோ அந்த சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து பல இடங்களுக்கு அழைத்து சென்று ஐஸ்கிரீம், சாக்லேட், பொம்மை மற்றும் பரிசு பொருட்களை வழங்கி வந்தார்.

பின்னர் அந்த சிறுமியை பாலியல் பலத்காரம் செய்து.  அந்த சிறுமியை 2-வது திருமணம் செய்ய விரும்புவதாக தனது கர்ப்பிணி மனைவியிடம் கூறினார்.

இதனால் கணவன்- மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து உதயகுமாரை காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது சிங்கப்பூர் ஜுடிசியல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி பங் கஞ்ச் சயூ  விசாரித்து சிறுமியை கற்பழித்த உதயகுமாருக்கு 13 ஆண்டு ஜெயில் தண்டனையும், மேலும் 12 பிரம்படியும் தண்டனை வழங்கிட உத்தரவிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here