வெள்ளைத் தாடியுடன் பிரசவ அறைக்கு வந்த நபர்..! அதிர்ந்த பெண்கள்..! இறுதியில் நேர்ந்தது என்ன..?

539

இலங்கையில் மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவர், தெற்கு மாத்துறை பகுதியில் உள்ள மருத்துவமனையில் வயிற்று வலி இருப்பதாக கூறி அனுமதிக்கப்பட்டார். தாடி மீசையுடன் இருந்த அவர், முதலில் ஆண்கள் வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். எப்போதும் வேண்டுமானாலும் குழந்தை பிறக்கக்கூடும் என்பதால், அந்த நபரை மருத்துவர்கள் பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர்.

தாடி, மீசையுடன் ஒரு ஆண் பிரசவ வார்டுக்கு வந்ததை பார்த்த மற்ற பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிது நேர போராட்டத்திற்கு பின்னர் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் பேசும்போது, பெண்ணாக பிறந்த அந்த நபர், ஹார்மோன் சுரப்பு காரணமாக ஆண்களைப்போன்று வாழ்ந்து வந்தார்.

மனதளவில் அவர் ஆணாக இருந்தாளும், உடலளவில் அவர் பெண்ணாக உள்ளார். இதனால் தான் அவரால் குழந்தையும் பெற்றுக்கொள்ள முடிந்தது. இந்த குழந்தையை அவர் வளர்க்க விரும்பவில்லை என கூறி விட்டதால் மருத்துவமனை நிர்வாகமே தற்போது கவனித்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of