வீட்டிற்கு 10 நிமிடம் லேட்டாக வந்த மனைவியை விவாகரத்து செய்த கணவர்!

755

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். உடல் நிலை பாதிக்கப்பட்ட பாட்டியை நலம் விசாரிக்க சென்றிருந்த மனைவி காணவில்லை என்று  கணவர் போன் செய்துள்ளார்.

அப்போது  தாய் வீட்டில் இருப்பதாக கூறிய மனைவியை இன்னும் அரை மணி நேரத்தில் இங்கு வர வேண்டும் என கணவர் உத்தரவிட்டதற்கு அவரும் சரி என அடித்து பிடித்து கிளம்பினார்.

அப்படியும் 10 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியின் சகோதரருக்கு போன் செய்து முத்தலாக் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதனால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து அந்த பெண் கூறுகையில் திருமணத்தின் போது எனது பெற்றோர் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் என் கணவர் வீட்டார் என்னை பலமுறை தாக்கியுள்ளனர். இது போல் என்னை அடித்ததால் எனது வயிற்றில் வளர்ந்த சிசு கலைந்து விட்டது.

எனது குடும்பம் வறுமையில் வாடுவதால் கணவர் வீட்டு கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது. இந்த ஆத்திரத்தில் வெறும் 10 நிமிடம் தாமதமாக வந்த என்னை என் கணவர் விவாகரத்து செய்து விட்டார்.

இந்த விவகாரத்தில் அரசு எனக்கு உதவ வேண்டும்.எனக்கு நீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். இல்லாவிட்டால் எனக்கு தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என அந்த பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of