சிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர்..! சிங்கத்திடம் பேசச் சென்றேன்! அதிர்ச்சியடைந்த காவல்துறை..

270

டெல்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் இளைஞர் ஒருவர் சிங்கம் முன்பு அமர்ந்து அதைத் தொந்தரவு செய்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து பூங்கா ஊழியர்கள் அந்த நபரை சிங்கத்திடமிருந்து மீட்டனர். சிங்கம் அந்த நபரைத் தாக்கவில்லை இது தொடர்பாக காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.காவலர்கள் வந்து அந்த நபரை அழைத்துச்சென்றனர். இதுகுறித்துப் பேசிய பூங்கா ஊழியர்கள் சிங்கம் இருந்த கூண்டுக்குள் இளைஞர் ஒருவர் இருப்பதாகப் பார்வையாளர்கள் கூறினர். பெரிய சுவர் மற்றும் அகழியைத் தாண்டி அந்த நபர் அங்கு சென்றுள்ளார்.

நாங்கள் அங்கு சென்றதும் பெரிய ஏணி ஒன்றை வைத்து மேலே வரும்படி கூறினோம். அந்த இளைஞரோ நாங்கள் சொல்வதைக் கேட்பதாக இல்லை. நான் சாக வந்திருக்கிறேன். என்னை யாரும் காப்பாற்றாதீர்கள் என்றார்.

அவர் சிங்கத்தைத் தொந்தரவு செய்தார். இருந்தும் சிங்கம் அவரை ஒன்றும் செய்யாதது ஆச்சர்யமாக இருந்தது என்றனர். காவல்துறையினரின் விசாரணையில் அந்த நபர் பீகாரைச் சேர்ந்த ரெஹான் கான் என்பது தெரியவந்தது.

அவர் தற்போது மேற்கு டெல்லியில் வசித்துவருகிறார். மனநலம் பாதிக்கப்பட்டவர் என உறவினர்கள் கூறியுள்ளனர். சிங்கத்திடம் பேசுவதற்காகச் சென்றேன் என காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.