மோடி கொடுத்த செம ஆஃபர்..! ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாணவர்..,!

472

கடந்த ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, மாணவர்களுக்கான வினாடி-வினா போட்டியை அறிவித்தார்.

இந்த போட்டியில் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் சந்திரயான்-2 நிலவில் தரை இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பான தகவலை இஸ்ரோ டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.

அதில், விண்வெளி தொடர்பான வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுபவர்கள், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் நிகழ்வை நேரலையில் காணலாம் என அறிவித்துள்ளது.

வினாடி வினா தொடர்பான தகவல்களை http ://quiz.mygov.in  என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் இஸ்ரோ கூறியுள்ளது.

Advertisement