“ரித்திக் ரோசன் செமையா இருக்காருப்பா..,” சொல் பேச்சைக் கேட்காத மனைவி..! கொலை செய்த கணவன்..!

559

அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தை சேர்ந்தவர் இந்தியரான தினேஷ்வர் புத்திதாட். 33 வயதான இவருக்கும், டோன் டோஜோய் என்ற பெண்ணிற்கும் இடையே கடந்த ஜூலை மாதம் திருணம் நடைபெற்றுள்ளது. இதில், டோன் நியூயார்க் நகரில் உள்ள பார் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

டோன், பாலிவுட்டின் முக்கிய ஹீரோ ரித்திக் ரோசனின் தீவிரமான ரசிகர் ஆவார். இவரது பாட்டை அடிக்கடி முனகிக்கொண்டே இருப்பாராம். ஆனால், இவரது கணவர் தினேஷ்வர்க்கு ரித்திக் ரோசனை சுத்தமாக பிடிக்காதாம். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டிருக்கிறது.

இது சில சமயங்களில் பெரும் பிரச்சனையாக மாறி, டோனை தினேஷ்வர் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு கணவன் மனைவியும் டிவி பார்த்துள்ளனர். அப்போது, டிவியில் ரித்திக் ரோசனின் பாட்டு வந்துள்ளது.

இந்த பாட்டை டோன் மெய் மறந்து கேட்டுக்கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் தினேஷ்வர் கோபத்தின் உச்சத்தில் இருந்துள்ளார். மேலும், அந்த சேனலை மாற்ற வேண்டும் என்றும் தனது மனைவியிடம் கூறியுள்ளார். எவ்வளவு சொல்லியும் சேனலை டோன் மாற்றாததால், கோபமடைந்த தினேஷ்வர் கத்தியை எடுத்து மனைவி குத்தி கொலை செய்தார்.

பின்னர் இந்த விஷயம் குறித்து தனது சகோதரிக்கு மெசேஜ் அனுப்பிய அவர், வீட்டில் இருந்தபடி தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.