மனைவியிடம் பேச்சை தவிர்க்க 62 ஆண்டுகள் ஊமையாக நடித்த பர்ரி.

1086
barry8.3.19

அமெரிக்காவின் வாடர்பரி என்ற இடத்தை சேர்ந்தவர் பர்ரி டவ்சோன், இவர் தனது மனைவி டோரதியுடன் பேசுவதை தவிர்க்க கடந்த 62 ஆண்டுகளாக வாய் மற்றும் காது கேளாதவர் போல நடித்து வந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் 80 வயதான டோரதி என்பர் 84 வயதான தனது கணவர் தன்னை ஏமாற்றுவதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நன்கு பேசவும், கேட்கவும் முடிகின்ற அவர் கடந்த 62 ஆண்டுகளாக காது கேளாதவர் போலவும், வாய் பேசமுடியாதவர் போலவும் ஏமாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் அவர் கூறுகையில், சில நாட்களுக்கு முன் இணையத்தில் வெளியான ஒரு வீடியோவில் தன் கணவர் ஒரு மதுபான விடுதியில் பாடல் பாடிக்கொண்டிருப்பதை கண்டு அதிரிச்சி அடைந்துள்ளார். தன்னிடம் ஒரு தொண்டு நிறுவனத்தின் நிகழ்ச்சிக்கு செல்வதாக சொல்லிவிட்டு அவர் அவ்வாறு செய்ததாக டோரதி கூறியுள்ளார்.

ஆனால் பர்ரியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞரோ தனது கட்சிக்காரரான பர்ரி இயல்பிலே ஒரு அமைதியான குணாதிசயம் உடையவர், ஆனால் டோரதியோ கடுகடுப்பாக பேசும் குணமுடவர் என்றும் பர்ரி இவ்வாறு நடிக்கவில்லை என்றால் 60 ஆண்டுகளுக்கு முன்பே இவர்களுக்கு விவாகரத்து ஆகியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.