தல அசையுது பாரு…- புதைக்கும்போது அசைந்த பிணம்..? – பிறகு காத்திருந்த அதிர்ச்சி

1251

ஒடிசா : ஆடு மேய்க்கும் மாலிக்(55) என்பவர் 2 நாட்களுக்கு முன் மாயமாகியுள்ளார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர் செல்லும் இடமெல்லாம் தேடி அலைந்துள்ளனர்.

அப்போது மாலிக் மூச்சு பேச்சின்றி ஓர் இடத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவர் இறந்துவிட்டதாக நினைத்து இறுதி சடங்கு நடத்தி பிணத்தை புதைக்க சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று குழிக்குள் வைக்கும்பொழுது மாலிக்கின் தலை மட்டும் அசைவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அலறி அடித்துக்கொண்டு உறவினர்கள் மருத்துவமணைக்கு தூக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாலிக் கடுமையான காய்ச்சலாலயே மயங்கி விழுந்துள்ளார் எனவும், மேலும் அவர் உயிருடன் தான் இருக்கிறார் எனவும் கூறியுள்ளனர்.