ரயிலுக்கு அடியில் சிக்கிய இளைஞர்! பதறவைக்கும் காட்சி!

713

மகாராஷ்டிராவில், ரயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடக்க முயற்சித்த நபர், நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அசாங்காயோன் ரயில் நிலையத்தின் நடைமேடையில் இருந்து கீழே இறங்கிய நபர் ஒருவர், தண்டவாளத்தின் குறுக்கே கடந்து மறுபுறம் செல்ல முயற்சித்தார்.

அப்போது அவ்வழியே அதிவேகமாக ரயில் வந்ததால், அவர் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார்.

ரயிலில் அடிபடாமல் நல்வாய்ப்பாக நூலிழையில் உயிர்தப்பிய அவர், அதன் பின்னர் தண்டவாளத்தைக்கடந்து மறுபுறம் சென்றார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த நிகழ்வால், அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.