Man Vs Wild-ல் ரஜினிகாந்த்..! நிகழ்ச்சியின் ஒளிபரப்பு தேதி அறிவிப்பு..!

373

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இந்த நிகழ்ச்சியை, தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸின் சாகசங்கள் தான் இதற்கு காரணம்,

ஒரு மனிதன், மிகவும் ஆபத்தான பகுதிகளில் சிக்கிக்கொண்டால் எப்படி அங்கிருந்து தப்பிப்பது என்பது குறித்து அந்நிகழ்ச்சியில் காண்பிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியாவின் பிரதமர் மோடி ஆகியோர் கலந்து கொண்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

இந்நிலையில் அந்த நிகழ்ச்சி எப்போது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கான வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of