விபத்தில் மகன் பலி.. உடலை பார்க்க வந்த தந்தை.. இறுதியில் நேர்ந்த இன்னொரு சோகம்..

1299

புதுச்சேரியில் உள்ள திருபுவனை பகுதியை சேர்ந்தவர் உத்திரகுமார். 35 வயதாகும் இவர், பள்ளிநேளியனூர் என்ற பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக வந்த கார், உத்திரகுமார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், பலத்த காயமடைந்த உத்திரகுமார், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், உத்திரகுமாரின் தந்தை விநாயகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனைக்கு வந்த விநாயகம், மகனின் உடலைப்பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். வாகன விபத்தில் மகன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தந்தையும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.