“மது குடிக்கிறியா.., இல்லையா..” ஒத்துக்கொள்ளாத மனைவிக்கு முத்தலாக் கூறிய கணவர்..!

616

பீகார் மாநிலத்தில் வசித்து வந்த பாத்திமா என்ற பெண்ணிற்கும், முஸ்தபா என்பவருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து சில நாட்கள் பீகார் மாநிலத்தில் இருந்த அவர்கள், டெல்லிக்கு இடம்பெயர்ந்தனர்.

அப்போது அங்கு இருக்கும் மாடர்ன் பெண்களை பார்த்த முஸ்தபா, தனது மனைவியையும் அவர்களைப்போன்று மாடர்னாக மாற வற்புறுத்தியுள்ளார்.

சிறிய அளவிலான ஆடைகளை அணியும்படியும், மது அருந்தும்படியும் தொல்லை செய்துள்ளார்.  இதற்கு அவரது மனைவி பாத்திமா மறுப்பு தெரிவித்ததால், முஸ்தபா மனைவியிடம் தினமும் சண்டையிட்டு வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்த கொடுமை நடைபெற்று வந்த நிலையில், தனது மனைவிக்கு முஸ்தபா முத்தலாக் கூறி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறியுள்ளார்.

இதையடுத்த அந்த பெண், காவல்நிலையத்திலும், மாநில மகளீர் ஆணையத்திடமும் புகார் அளித்தார். புகாரின் பேரில் முஸ்தபாவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of